தமிழகத்தில் இன்று உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
தமிழகத்தில் இன்று உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
தமிழகத்தில் இன்று உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
தமிழகத்தில் இன்று உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது. பின்பு தமிழகத்தில் சில வாரங்களாக தங்கம் விலை குறைந்து இருந்தது. இதனால் நகைப்பிரியர்கள் அதிகம் நகை வாங்கினார். இருப்பினும் இன்று தங்க விலை நேற்றைய விலையை விட சற்று உயர்ந்து உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு:

கொரோனா வருகைக்கு பின்னர், பாதுகாப்பிற்காக அதிகமானோர் தங்கத்தில் தான் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தங்கம், மிகப்பெரிய சொத்தாக மதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் அது பொருளாதார பாதுகாப்பையும் தருகிறது. நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும். தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும்.

TNPSC GROUP 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!

அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். உக்ரைனில் நடந்துவரும் போர், ரஷ்யா மீதான பொருளாதார தடை போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. தங்க விலையானது வாரத்தின் முதல் நாளான நேற்று திங்கள் விலை இறக்கத்துடன் தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளான இன்று சற்று விலை அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 48 விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு – ரூ.18,000/- ஊதியம்..!

நேற்று மாலை இதன் விலை ரூ. 4810ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6 உயர்ந்துள்ளது. அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,480-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 48 உயர்ந்து ரூ.38,528-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4816 விற்பனை செய்யப்படுகின்றது. தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.60-க்கு விற்பனையான நிலையில் இன்று 0.60 காசுகள் குறைந்து ரூ. 71.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!