இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமனம்.. வெளியான முக்கிய தகவல்!!

0
இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமனம்.. வெளியான முக்கிய தகவல்!!

இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார். இந்நிலையில், அந்நாட்டு இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் கட்சியின் எம்.பி. ஹரிணி அமரசூரியா இன்று (செப்டம்பர் 24) பதவியேற்றுக் கொண்டார்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஹரிணி அமரசூரியவுக்கு, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய, நீதி, கல்வி, தொழில், கைத்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டார். இலங்கையின் 3-வது பெண் பிரதமர் ஹரிணி அமரசூரியா என்பது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!