ஹர்திக் vs மலிங்கா இடையில் என்ன பிரச்சனை – வைரல் வீடியோ பதிவு!

0
ஹர்திக் vs மலிங்கா இடையில் என்ன பிரச்சனை - வைரல் வீடியோ பதிவு!

இந்தியா முழுவதும் ஐபிஎல் ஃபீவர் தொற்றியுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் மலிங்கா இருவர் குறித்தான வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐபிஎல் போட்டிகளில் ஐந்து முறை வெற்றிக் கோப்பைகளை பெற்றுள்ளது. மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர்களின் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் 2024 ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் முடிந்த சிறிது நாட்களுக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என்று அணி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு பலத்தை ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் நடப்பாண்டு போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கலந்து கொண்ட இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

Diploma / Degree முடித்துவிட்டீர்களா… சென்னை IT நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ இத மிஸ் பண்ணிடாதீங்க!

கேப்டன் ஹார்டிக் பாண்டியா சகவீரர்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற்ற தொடரின் எட்டாவது போட்டியில், போட்டி முடிந்த பிறகு வீரர்கள் மரியாதை நிமித்தமாக கைகுலுக்கி கொண்டனர். அப்போது அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்கா, ஹர்திக் பாண்டியாவுடன் கைகுலுக்க வரும்போது, அவரை ஹர்திக் இடது புறமாக தள்ளுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹர்திக்-ன் இந்த செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!