முட்டை உடைத்து கின்னஸ் உலக சாதனை படைத்த இளைஞன்…!! ” குவிந்து வரும் பாராட்டு மழை…!!
“கின்னஸ் உலக சாதனை புத்தகம்” என்பது மனிதர்களாலும் இயற்கை நிகழ்வுகளாலும் ஏற்படுத்தப்படும் உலகளாவிய சாதனைகளை தொகுத்து வழங்குகின்ற புத்தகம் என்று கூறலாம். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு சாதனைகளை புரிந்து இந்த கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர். அந்த வகையில், இத்தாலியை சேர்ந்த மரியோ லம்புக்னானி என்பவர் முட்டையால் கின்னஸ் சாதனை படைத்த விடியோ பதிவு ஒன்று கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது
அந்த பதிவில், “ஒரு நிமிடத்தில் 52 முட்டைகளை முழங்கை மூலம் உடைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், வழக்கத்திற்கு மாறாக அவர் கைகளை பின்பக்கமாக மடக்கி முட்டைகளை உடைத்ததால் அது சாதனை என்று கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று இத்தாலியின் மிலன் நகரில் நடந்த ‘லோ ஷோ டீ ரெக்கார்ட்’ நிகழ்வில் மரியோ என்பவர் இந்த குறிப்பிடத்தக்க முட்டை உடைப்பு சாதனையை செய்தது குறிப்பிடத்தக்கது.
























