தமிழக ஆசிரியர் பணி நியமன தேர்வுக்கான வயது வரம்பு நீக்கம் – அரசுக்கு கோரிக்கை!!

0
தமிழக ஆசிரியர் பணி நியமன தேர்வுக்கான வயது வரம்பு நீக்கம் - அரசுக்கு கோரிக்கை!!
தமிழக ஆசிரியர் பணி நியமன தேர்வுக்கான வயது வரம்பு நீக்கம் - அரசுக்கு கோரிக்கை!!
தமிழக ஆசிரியர் பணி நியமன தேர்வுக்கான வயது வரம்பு நீக்கம் – அரசுக்கு கோரிக்கை!!
ஆசிரியர் பணி நியமனத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள வயது வரம்பை ரத்து செய்ய வேண்டும் என்று ஆயக்குடி மரத்தடி இலவசப்பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி கோரிக்கை வைத்துள்ளார்.

புதிய அரசாணை:

பெரும்பான்மையான மாநிலங்களில் பணிக்கு சேர வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத ஒரே பணியாக ஆசிரியர் பணி மட்டுமே உள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்னர் ஆசிரியர் பணிகளுக்கான வயது வரம்பாக 57 இருந்தது. இதனை ரத்து செய்து ஆசிரியர் பணி நியமனத்துக்கு பொது பிரிவினருக்கு வயது வரம்பாக 40ம், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 ஆகவும் கடந்த ஆண்டு புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை – கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!!

தமிழக அரசின் இந்த புதிய அரசாணைக்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஆசிரியர் பணி நியமனத்துக்கான புதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய முறையை பின்பற்ற வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

பயிற்சி மைய இயக்குனர்:

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ள நிலையில், அதற்கான டி.ஆர்.பி தேர்வு ஜூன் மாதம் 26, 27ம் தேதிகளில் நடக்க உள்ளது. இந்நிலையில், ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி அவ்ர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு எப்போதாவது தான் நடத்தப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள வயது வரம்பால் பலர் ஆசிரியர் பணியினை பெரும் வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும். எனவே டி.ஆர்.பி தேர்வுக்கு வயது வரம்பு இல்லாமல் விண்ணப்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!