தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு மீண்டும் ஆளுநர் ஒப்புதல்.. வெளியான முக்கிய தகவல்..!!
கடந்த மார்ச் 14 முதல் ஏப்ரல் 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் R.N.ரவி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாக்கள் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருந்தற்காக ஆளுநர் மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தையும் பயன்படுத்தி, நிலுவையில் இருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது.
பின்னர் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாவிற்கும் ஆளுநர் ஏப்ரல் 22 ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில் தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் R.N.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், 4 மசோதாக்களுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் 14 மசோதாக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


























