அரசு ஊழியர்களுக்கு இனி வார விடுமுறை கிடையாது – பிரதமர் அதிரடி உத்தரவு!

0
அரசு ஊழியர்களுக்கு இனி வார விடுமுறை கிடையாது - பிரதமர் அதிரடி உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு இனி வார விடுமுறை கிடையாது - பிரதமர் அதிரடி உத்தரவு!அரசு ஊழியர்களுக்கு இனி வார விடுமுறை கிடையாது - பிரதமர் அதிரடி உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு இனி வார விடுமுறை கிடையாது – பிரதமர் அதிரடி உத்தரவு!

பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்ற முதல் நாளிலேயே அரசு அலுவலர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட இரண்டு வார விடுமுறைக்கு பதில் இனி ஒரு நாள் தான் என அறிவித்துள்ளார். இதையடுத்து பிரதமர் அலுவலக வேலை நேரத்தை காலை 8 மணியாகவும் மாற்றி உள்ளார்.

அதிரடி உத்தரவு:

அண்டை நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதன் காரணமாக பெரும்பான்மையை இழந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாடாளுமன்றத்தை கலைக்கும் இம்ரான் கான் முடிவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதை அடுத்து பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ந்தது.

TN Job “FB  Group” Join Now

இதன் பின்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பாக்.,கின் 23 வது பிரதமராக, நேற்று முன் தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாக்.,பிரதமராக மூன்று முறை பதவி வகித்த நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான இவர், பஞ்சாப் மாகாண முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டியவை. பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப் முதல் நாளான நேற்று ஊழியர்கள் வருவதற்கு முன்னதாகவே காலை 8 மணிக்கு தனது அலுவலகத்தை அடைந்தார். அதேசமயம் பிரதமர் அலுவலக ஊழியர்களில் பெரும்பாலானோர் காலை 10 மணிக்கு வழக்கமான நேரத்தில் வந்தனர். முந்தைய இம்ரான் கான் அரசு வழக்கமாக பின்பற்றிய நேரம் 10 மணியாகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட அகவிலைப்படி (DA) விகிதங்கள் – முழு விவரம் இதோ!

இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலக நேரத்தை காலை 10 மணிக்கு பதிலாக காலை 8 மணியாக மாற்றி உடனடியாக அறிவிப்பை வெளியிட்டார் ஷெபாஸ். மேலும், அரசு அலுவலகங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார். இனி அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் என கூட்டணி கட்சிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!