மத்திய அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட அகவிலைப்படி (DA) விகிதங்கள் – முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட அகவிலைப்படி (DA) விகிதங்கள் - முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட அகவிலைப்படி (DA) விகிதங்கள் - முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட அகவிலைப்படி (DA) விகிதங்கள் – முழு விவரம் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதத்தில் 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி (DA) தொகை ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த அகவிலைப்படிக்கான திருத்தப்பட்ட விகிதங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

அகவிலைப்படி விகிதங்கள்

கடந்த பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசுத்துறையில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் கொடுப்பனவான அகவிலைப்படி (DA) தொகை 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த புதிய கட்டணங்கள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருகின்றன. இதனுடன் மத்திய செலவினத் துறை, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியின் (DA) திருத்தப்பட்ட விகிதங்களையும் அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்த அலுவலக குறிப்பாணையில், ‘01.01.2022 முதல் 5வது மத்திய ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கான அகவிலைப்படியின் திருத்தப்பட்ட விகிதங்கள், 5வது மத்திய ஊதியக் குழுவின்படி முன் திருத்தப்பட்ட ஊதிய அளவு / தர ஊதியத்தில் தொடர்ந்து ஊதியம் பெறுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தகைய ஊழியர்களுக்கான டிஏ தற்போதுள்ள 368 சதவீதத்தில் இருந்து 381 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அடிப்படை ஊதியம் அல்லது ஓய்வூதியத்தை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது.

கதிருக்கு தெரியாமல் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இந்த உயர்வு 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபார்முலாவின்படி ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னதாக அக்டோபர் 21, 2021 அன்று மத்திய அரசு ஊழியர்களின் DA மற்றும் DR, அடிப்படை ஊதியம் அல்லது ஓய்வூதியம் 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தது. ஏற்கனவே, ஜூலை 14, 2021 அன்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA மற்றும் DR, 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!