
சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – 72 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ !
Junior Engineering Assistant மற்றும் Technical Assistant பணியிடங்களை நிரப்ப சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 72 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
அறிவிப்பின்படி, Junior Engineering Assistant -IV பணிக்கு 28 பணியிடங்கள், Junior Engineering Assistant -IV Trainee பணிக்கு 30 பணியிடங்கள், Junior Technical Assistant -IV பணிக்கு 08 பணியிடங்கள் மற்றும் Junior Technical Assistant -IV Trainee பணிக்கு 06 பணியிடங்கள் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Junior Engineering Assistant -IV Trainee மற்றும் Junior Technical Assistant -IV Trainee பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.
TN Job “FB
Group” Join Now
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் Mechanical Engineering / Electrical / Electrical & Electronics Engineering / Instrumentation / Instrumentation & Electronics / Instrumentation & Control / Chemical / Petroleum / Petrochemical Engineering போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Diploma (3 ஆண்டு) படித்து முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். Junior Engineering Assistant மற்றும் Junior Technical Assistant பணிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அல்லது பிரிவுகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – துறைத்தேர்வு முடிவுகள் வெளியீடு !
மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் கூடுதல் தொகை பற்றிய விவரங்களை அறிவிப்பில் காணலாம். Gen / OBC / EWS – ரூ.1000/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும். SC /ST / PwBD / ExSM / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Download CPCL Notification PDF