ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.480 உயர்வு – அதிர்ச்சியில் தாய்மார்கள்!!

0
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.480 உயர்வு - அதிர்ச்சியில் தாய்மார்கள்!!
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.480 உயர்வு - அதிர்ச்சியில் தாய்மார்கள்!!
ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.480 உயர்வு – அதிர்ச்சியில் தாய்மார்கள்!!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.47ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படும் நிலையில் இன்று மீண்டும் ரூ.480 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை:

அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததையொட்டி தமிழகத்தில் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6385க்கும், சவரன் ரூ.51,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5915க்கும், சவரனுக்கு ரூ.47,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாய் உயர்ந்துள்ளது. அதாவது, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.6445க்கும், சவரன் ரூ.480 அதிகரித்து ரூ.51,560க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ. 5975க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.47,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல, நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.83.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, தங்கத்தின் விலை கூடுதலாக விற்பனை செய்யப்படும் நிலையில் இன்று இன்னும் கூடுதலாக ரூ.480 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!