
Today Gold Rate: இரண்டாவது நாளாக உயர்ந்த தங்கம் விலை…!! ஒரே நாளில் உச்சத்தை தொட்டதால் சாமானிய மக்கள் அதிர்ச்சி…??
இந்தியாவில் அதிக தங்க ஆபரணங்கள் வாங்கி பயன்படுத்தும் மக்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்த தங்கத்தின் விலையானது மீண்டும் அதிர்ச்சி தரும் விதமாக, அதிகரிக்க தொடங்கியதால் சாமானிய மக்கள் நகைகள் வாங்க யோசிக்கின்றனர். இந்நிலையில், இன்று (05.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி திருச்சியில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.440 உயர்ந்து 1 சவரன் ரூ. 64,520 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,07,000 ஆகவும், 1 கிராம் ரூ. 107 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


























