Today Gold Rate: தலைசுற்ற வைக்கும் தங்கம் விலை…!! தொடர் உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி…!!
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியானது 6% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இதனால், தங்கத்தின் விலையானது குறையும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், நாளுக்கு நாள் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து தற்போது சவரனுக்கு ரூ. 66,000 யை தொட்டுள்ளது. அந்தவகையில், இன்று (20.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி நெல்லையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து 1 சவரன் ரூ. 66,480 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,14,000 ஆகவும், 1 கிராம் ரூ. 114 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

























