
Today Gold Rate: “ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை…!!” இன்னைக்கு 1 சவரன் எவ்ளோ தெரியுமா மக்களே…??
இந்தியாவில் அதிக தங்க ஆபரணங்கள் வாங்கி பயன்படுத்தும் மக்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகிறது. ஆனால், தற்போது அதிர்ச்சி தரும் விதமாக தங்கத்தின் விலையானது 1 சவரனுக்கு ரூ. 64,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டதால் மக்கள் நகைகள் வாங்க யோசிக்கின்றனர். இந்நிலையில், இன்று (25.02.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, சென்னையில் இன்று (25.02.2025) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 1 சவரன் ரூ. 64,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,075 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,08,000 ஆகவும், 1 கிராம் ரூ.108 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.























