
நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. போர் பதற்றத்திற்கு நடுவே சரிந்த தங்கம் விலை.. இன்று எவ்வளவு தெரியுமா..??
சர்வதேச பங்குச் சந்தையில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மையால் இந்தியாவில் தங்கத்தின் விலையானது அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் ரூ.65,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. இதனால் சாமானிய மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
GRI திண்டுக்கலில் Computer Operator வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.22,680/- || இறுதி வாய்ப்பு!
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று (08-05-2025) தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.9,130 ஆகவும், ஒரு சவரன் ரூ.73,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, “இன்று (09-05-2025) கிராமுக்கு ரூ.115 குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமின்றி நேற்றைய விலைக்கே அதாவது ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.























