2026 சட்டமன்ற தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணியா?? தவெக பொது செயலாளர் ஆனந்த் விளக்கம்!!
விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் நிலைப்பாடு குறித்தும், மத்திய, மாநில அரசுகள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருந்தார். அதே சமயம் அதிமுகவை அவர் விமர்சனம் செய்யாததால் அதிமுகவும் – தவெகவும் கூட்டணி என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிப்பு.. நிதிக்குழுவிடம் முறையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்!!
இந்நிலையில் இந்த கூட்டணி விவகாரம் குறித்து தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் விளக்கமளித்துள்ளார். அதில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது’. ‘வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கழகத் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு தவெக 2026 தேர்தலில் வெற்றி பெறும்’. ‘மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள்’. ‘எனவே மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

























