தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பினருக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் – தேர்வுத்துறையின் அதிரடி உத்தரவு!

1
தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பினருக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் - தேர்வுத்துறையின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பினருக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் - தேர்வுத்துறையின் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பினருக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் – தேர்வுத்துறையின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்களை பத்திரமாக பாதுகாக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை இயக்கம் புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகள்:

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை கற்றனர். தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. தொடர்ந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்புகள் காரணமாக பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண் வழங்க திட்டமிடப்பட்டது.

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு பள்ளிகள் முன்னதாக திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பாடங்களை விரைவாக முடிக்க தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், தற்போது மாணவர்களுக்கு 2ம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆனால் திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள் இணையத்தில் வெளியாகியது. தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. இதனால் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் மீண்டும் வேலை? முதல்வர் அறிவிப்பு!

இந்நிலையில், நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகள் குறித்து தமிழக அரசுத்தேர்வுகள் துறை தற்போது புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, வினாத்தாள் வைக்கப்பட்டிருக்கும் தேர்வு கட்டுப்பாட்டு மையங்களில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும், தொடர்ந்து காவலர் பணியில் இருக்க வேண்டும். மேலும் இரட்டை பூட்டுக்கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறைகள் பூட்டப்பட்டிருக்க வேண்டும். பொதுத்தேர்வு மையங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிப்பாளராக இருக்க கூடாது. அரசு பள்ளி ஆசிரியர்களே தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. From
    10th and 12th students,
    Tamilnadu.

    To
    The Educational Minister,
    Mr. Anbil Mahesh.

    Sub: Board Exam.

    Sir,
    Our board examination are planned to conducted on May for grade 10 and 12. But Syllabus are not fully covered. There just only one month left…We can’t cover those syllabus in just one month. So, we request you to make first revision and second revision exams syllabus as Board exam syllabus.

    10/04/2022
    Yours faithfully,
    10th and 12th students.

    Share this, till it received by Anbil Mahesh Sir…. 🙏🏻🙏🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!