தமிழக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் மீண்டும் வேலை? முதல்வர் அறிவிப்பு!

0
தமிழக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் மீண்டும் வேலை? முதல்வர் அறிவிப்பு!
தமிழக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் மீண்டும் வேலை? முதல்வர் அறிவிப்பு!
தமிழக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் மீண்டும் வேலை? முதல்வர் அறிவிப்பு!

கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் நல பயனாளர்கள் வேலை சேர்ப்பு மற்றும் போதுமான ஓய்வூதிய கொடுக்கப்படாமல் இருந்தனர்.அதனால் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என கூறியுள்ளார்.

மக்கள் நலப்பணியாளர்கள்

கிராம அளவில் பல்வேறு பணிகளுக்காக 1989-ல் 25,354 மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.மேலும் 1991-ல் அதிமுக ஆட்சியில் 25,234 மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1997 பிப்ரவரியில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்பட்டது. அதனையடுத்து பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு 2001 ஜூன் மாதம் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் வேலையை விட்டு நீக்கியது என்று அவர் கூறினார்.

ரயில்வே துறை ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி உயர்வு அமல்?

2011ம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அவர்கள் மக்கள் நலப் பணியாளர்களை வேலை நிறுத்தம் செய்யபட்டன.திமுக ஆட்சிக்கு வந்தால் வேலைக்கு சேர்ப்பதும் அதிமுக வந்தால் வேலை நிறுத்தம் செய்வதும் வழக்கமானதாக நடந்து கொண்டிருக்கிறது.2014 ஆகஸ்டில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு மேல்முறையீடு செய்தது.ஊராட்சிகளில் 100 நாள் வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA பற்றிய அறிவிப்பு – 7வது சம்பள கமிஷன் அப்டேட்!

மேலும் மக்கள் நல பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர் களுக்கு ரூ.2500 கூடுதலாக வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.ஏற்கனவே பணியில் இருந்த மக்கள் நலப் பணியாளர்கள் குடும்ப வாரிசுகளுக்கும் அவர்கள் விரும்பினால் பணி தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!