தமிழகத்தில் 5 நாட்கள் முழு ஊரடங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

0
தமிழகத்தில் 5 நாட்கள் முழு ஊரடங்கு - பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 5 நாட்கள் முழு ஊரடங்கு - பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 5 நாட்கள் முழு ஊரடங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 5 நாட்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்று மக்களை பாதிப்புள்ளாகி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் வணிக வளாகங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலையிழந்து மாத வருமானமின்றி சிரமப்பட்டனர்.

Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள் உயர்வு! முழு விவரம் இதோ!

இந்த நேரத்தில் அரசு தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக தற்போது பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கை நோக்கி நகரும் வேளையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள பட்டவர்த்தி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதனை தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அப்பகுதியில் 5 நாட்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

இன்று அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர். அதேநாளில் தலைஞாயிறு கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி உற்சவம் நடத்த மற்றொரு பிரிவினா் அனுமதி வேண்டினர். இந்த நிகழ்வுகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 13 முதல் 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!