Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள் உயர்வு! முழு விவரம் இதோ!

0
Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD வட்டி விகிதங்கள் உயர்வு! முழு விவரம் இதோ!
Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD வட்டி விகிதங்கள் உயர்வு! முழு விவரம் இதோ!
Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD வட்டி விகிதங்கள் உயர்வு! முழு விவரம் இதோ!

தற்போது கோடக் மஹிந்திரா வங்கியை சேர்ந்த வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட கணக்குகளுக்கான நிலையான வைப்பு வட்டி (FD) விகிதங்களை வங்கி நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

FD வட்டி விகிதங்கள்

முன்னணி தனியார் கடன் வழங்கும் நிறுவனமான கோடக் மஹிந்திரா வங்கி, வெவ்வேறு காலங்களின் நிலையான வைப்புத்தொகையின் (FD) வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தியுள்ளது. சமீபத்திய FD விகித உயர்வு 2 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கோடக் மஹிந்திரா வங்கி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் உள்நாட்டு, NRO மற்றும் NRE நிலையான வைப்பு கணக்குகளுக்கு பொருந்தும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்களுக்கான விகிதங்கள் NRO மற்றும் NRE வைப்புகளுக்குப் பொருந்தாது.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது – திடீர் அறிவிப்பு!

இந்த புதிய கட்டணங்கள் ஏப்ரல் 12 முதல் அமலுக்கு வந்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பில், 121 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான காலத்திற்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் மற்றும் 364 நாட்களுக்கு உயர்த்தியுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. தொடர்ந்து நிலையான வைப்புகளுக்கு முறையே 4.50 சதவீதம் மற்றும் 4.75 சதவீதம் வட்டி கிடைக்கும். மேலும், நான்கு வருடங்கள் அல்லது அதற்கு மேல் ஆனால் ஐந்து வருடங்களுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு முன்பு 5.45 சதவீதமாக இருந்த வட்டி விகிதத்தை, இப்போது வங்கி 5.50 சதவீதமாக வழங்கும்.

கோடக் மஹிந்திரா வங்கியில் (ஆண்டுக்கு) ரூ.2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்:
  • 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை– பொது மக்களுக்கு: 2.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு – 3.00 சதவீதம்
  • 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை – பொது மக்களுக்கு: 2.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 3.00 சதவீதம்
  • 31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை – பொது மக்களுக்கு: 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 3.25 சதவீதம்
  • 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை – பொது மக்களுக்கு: 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 3.25 சதவீதம்
  • 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை – பொது மக்களுக்கு: 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 3.50 சதவீதம்
  • 121 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை – பொது மக்களுக்கு: 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 4 சதவீதம்

  • 180 நாட்கள் – பொது மக்களுக்கு: 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5 சதவீதம்
  • 181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை – பொது மக்களுக்கு: 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5 சதவீதம்
  • 270 நாட்கள் – பொது மக்களுக்கு: 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5 சதவீதம்
  • 271 நாட்கள் முதல் 363 நாட்கள் வரை – பொது மக்களுக்கு: 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5 சதவீதம்
  • 364 நாட்கள் – பொது மக்களுக்கு: 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.25 சதவீதம்
  • 365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரை – பொது மக்களுக்கு: 5.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.60 சதவீதம்
  • 390 நாட்கள் (12 மாதங்கள் 25 நாட்கள்) – பொது மக்களுக்கு: 5.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.70 சதவீதம்
  • 391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்கும் குறைவானது – பொது மக்களுக்கு: 5.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.70 சதவீதம்
  • 23 மாதங்கள் – பொது மக்களுக்கு: 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.75 சதவீதம்
  • 23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது – பொது மக்களுக்கு: 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.75 சதவீதம்
  • 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – பொது மக்களுக்கு: 5.30 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.80 சதவீதம்
  • 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 4 ஆண்டுகளுக்கு குறைவாக – பொது மக்களுக்கு: 5.45 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.95 சதவீதம்
  • 4 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்கு குறைவாக – பொது மக்களுக்கு: 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6 சதவீதம்
  • 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் உள்ளடக்கியது – பொதுமக்களுக்கு: 5.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.10 சதவீதம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!