முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரிக்கை: விவசாயிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
சென்னை தலைமைச் செயலகம் முன்பு பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் உறுதி
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்ததாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு எடுக்க உள்ள அடுத்தகட்ட முடிவு என்ன என்பது விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



























