மே 1 முதல் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!!!

0
மே 1 முதல் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!!!
மே 1 முதல் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!!!
மே 1 முதல் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி – ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் வரும் மே 1ம் தேதி முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் ஊழியர்களுக்கு செலுத்தப்பட உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகள்:

நாட்டில் கொரோனா நோய் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னுரிமை அடிப்படையில் முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற வரிசையில் செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது தடுப்பூசியின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதால் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தட்டச்சு பயிற்சி மையங்களுக்கு தடை – தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவு!!

தனியார் நிறுவனங்கள்:

பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கி வருகிறது. அந்த வரிசையில் நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் தங்களது ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக முன்னரே அறிவித்திருந்தது. தற்போது மே 1ம் தேதி முதல் அதற்கான பணிகளை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தடுப்பூசி திட்டம்:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த தடுப்பூசி திட்டத்திற்கு ரிலையன்ஸ் சுரக்ஷா என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அறக்கட்டளையின் நிறுவனரும் இணைந்து ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதனால் எந்தவித தாமதமும் இன்றி வரும் மே 1ம் தேதி முதல் தாங்களும், 18 வயதிற்கு மேற்பட்ட தங்களின் குடும்பத்தினரும் தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here