தமிழகத்தில் ரூ.12,800 கோடி முதலீடு செய்த ஆப்பிள் நிறுவனம்.. வெளியான முக்கிய தகவல்..!!
அமெரிக்க அதிபர் டிரம்பின் மற்ற நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கான பதில் வரி விதிப்பானது கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து சீனா, அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிலவியது. இதனால் பல ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் தனது iPhone-களை தயாரிக்க சீனாவையே நம்பியிருந்த நிலையில், அந்நாட்டின் மீது டிரம்ப் விதித்த அடுத்தடுத்த வரி விதிப்பால் இனி அமெரிக்கச் சந்தைகளில் விற்கப்படும் iPhone-களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார்.
BECIL ஆணையத்தில் ரூ.18,993/- சம்பளத்தில் வேலை – முழு விவரங்களுடன்!
இந்நிலையில் ஆப்பிள் iPhone உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் (Foxconn) இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை சென்னை அருகே அமைத்து உலக நாடுகளுக்கு ஆப்பிள் போன்களை ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும், “தமிழ்நாட்டில் iPhone உற்பத்தி அதிகரிப்பால் பாக்ஸ்கான் நிறுவனத்தின் வருவாய் 2 மடங்காக அதிகரித்து, 2024-25 நிதியாண்டில் ரூ.1.7 லட்சம் கோடி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே iPhone உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் வகையில் கூடுதலாக ரூ.12,800 கோடியை பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.



























