அண்ணா பல்கலையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – புதிய பாடங்கள் அறிமுகம்!

0
அண்ணா பல்கலையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு - புதிய பாடங்கள் அறிமுகம்!
அண்ணா பல்கலையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு - புதிய பாடங்கள் அறிமுகம்!
அண்ணா பல்கலையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – புதிய பாடங்கள் அறிமுகம்!

தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழகம் ஆனது பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 40 புதிய விருப்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், ஆர்வமுள்ள மாணவர்கள் இனி விரும்பிய பாடங்களை தங்களின் விருப்ப பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அடுத்து என்ன படிக்கலாம் என்று மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் படித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் படித்த எல்லோருக்கும் வேலை கிடைப்பதில்லை. எனவே, நிறுவனங்களும் தங்களுக்கு மிகப் பொருத்தானவர்களையே வேலைக்கு எடுக்கின்றன. ஒரு நிறுவனத்தின் பணிக்கேற்ற திறமை உள்ளவர்களுக்கு வேலை கிடைத்து விடுகிறது. படித்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு, வேலைக்குத் தேவையான திறமைகளை அவர்கள் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதே காரணம். படிப்பைத் தவிர அவர்கள் துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பரான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது பொறியியல் படிக்கும் அனைவரும், தங்கள் எதிர்கால வேலைவாய்ப்பு, தங்களின் விருப்பம், விரும்பிய துறை, தனித் திறமைகளை வளர்க்க, கூடுதல் திறனைப் பெற , 3 மற்றும் 4வது ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பாடங்களைத் தவிர, விருப்பப் பாடங்களாக சிலவற்றைத் தேர்வு செய்து படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படியான விருப்ப பாடங்களின் பட்டியலை, ஒவ்வொரு பாடப்பிரிவு மற்றும் செமஸ்ருடருக்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழகம் அதன் பாடத்திட்டத்தில் வழங்கும். அதில் விருப்பமானதை மாணவர்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம்.

TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – உத்தேச விடை வெளியீடு!

இந்நிலையில் , அண்ணா பல்கலைக்கழகம் 40 புதிய விருப்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என கல்வியாளர் ரமேஷ் பிரபா தெரிவித்துள்ளார். இவற்றில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தரவு ஆய்வு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் உள்ளிட்ட பாடங்களை விருப்ப பாடங்களாக வழங்குகிறது. அதேநேரம் இந்தப் பாடங்களின் தேவை கருதி, கட்டாய பாடங்களாக வழங்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதேபோல் இறுதியாண்டில் 6 மாத தொழிற்பயிற்சி வழங்கவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!