TNPSC தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – உத்தேச விடை வெளியீடு!
தமிழகத்தில் இந்த மாதம் நடைபெற்ற TNPSC துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் நேற்று (ஜூன் 28) அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
உத்தேச விடை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்பட்ட துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் நேற்று (ஜூன் 28) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகளை தேர்வர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை சுமார் 151 துறைகளுக்கான TNPSC தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகள் வழக்கத்தின் படி கொள்குறி மற்றும் விரிந்துரைக்கும் வகை உள்ளிட்ட புதிய பாடத்திட்டத்தின்படி நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இத்தேர்வுகளுக்காக சென்னை மற்றும் டெல்லி உள்ளிட்ட 39 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், துறைத் தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியிப்பட இருக்கும் நிலையில் தற்போது 122 தேர்வுகளுக்கான உத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் நேற்று (ஜூன் 28) வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் துறைத்தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தங்களது உத்தேச விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழக வாகன ஓட்டிகளுக்கு பார்க்கிங் கட்டணம் உயர்வு? அதிகாரிகள் விளக்கம்!
இப்போது உத்தேச விடைகள் மீது ஏதேனும் மறுப்பு இருந்தால் அவற்றை இன்று (ஜூன் 29) முதல் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி வரைக்கும் உள்ள ஒரு வார கால அவகாசத்தில் தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கலாம். அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அந்த வினாவின் உத்தேச விடை மற்றும் விண்ணப்பதாரரின் விடை ஆகியவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஜூலை 5ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த மனுக்கள் மின்னஞ்சல் மூலமாக வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.