உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் உள்ளதா..?? அதை மாற்ற உடனே இதை செய்யுங்க.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்..!!
சராசரி மக்கள் தங்களது அனைத்து பெரிய பணப் பரிமாற்றங்களுக்கும் வங்கியை சார்ந்தே உள்ளனர். மேலும், மக்களின் பண விவகாரங்கள் மற்றும் பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை ரிசர்வ் வங்கியின் முக்கியமான செயல்பாடுகளாகும். அந்த வகையில் மக்களால் அன்றாட பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளுக்கு சேதம் ஏற்படும் நிலையில் அதை RBI மூலம் மாற்றி கொள்ளலாம். இதற்கான செயல்முறைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
TANUVAS பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மூலம் தேர்வு || ரூ.35,000/- சம்பளம்!
அதாவது, இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி உங்கள் கிழிந்த அல்லது எரிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் உண்டு என்றும், இந்த விதியானது நோட்டின் நிலையைப் பொறுத்து மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “முக்கியமாக மகாத்மா காந்தி அல்லது அசோக சக்கரத்தின் படம் இருக்கும் ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் மாற்றிக்கொள்ள முடியும். இதுவே எரிந்த ரூபாய் நோட்டாக இருந்தால் ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகத்தில் மாற்றிக்கொள்ளலாம்”. இவ்வாறு “சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் அதிகபட்சமாக ரூ.5000 வரை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் எனவும், அதற்கு மேல் மாற்ற, அடையாள அட்டை, வங்கி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது”. இறுதியாக இந்த விதியானது முழுவதுமாக சேதமடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.



























