உங்களுக்கு கடன் இருக்க..!! அப்போ இந்த  தகவல் உங்களுக்குத்தான்..!!

0
?????????? ???? ??????..!! ????? ????  ????? ????????????????..!!
உங்களுக்கு கடன் இருக்க..!! அப்போ இந்த  தகவல் உங்களுக்குத்தான்..!!

உங்களுக்கு கடன் இருக்க..!! அப்போ இந்த  தகவல் உங்களுக்குத்தான்..!!

 

பொதுவாக மக்கள் தங்களுக்குத் தேவையான  போது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குகின்றனர். அவ்வாறு வாங்கும் கடன் ஒன்றின் பின் ஒன்றாக அதிகரிக்கும் நிலையில் அது சுமையாக மாறுகிறது. இதை சுலபமாக நிர்வகிக்கும் சில எளிய வழிகளை குறித்து காண்போம்.

அதாவது கடன் சுமையை குறைக்க முதலில் உங்கள் செலவுகளை நிர்வகிக்கவும். அதாவது,  தேவையற்ற செலவுகளை தவிர்த்து அத்தியாவசியப் பொருட்களின் மீது கவனம் செலுத்துங்கள். மேலும் உங்களுக்கு என்று ஒரு பட்ஜெட்டை உருவாக்கி, கடன்கள் அனைத்தும் நிறைவாகும் வரை சொகுசு செலவுகளைத் தவிர்த்தால் சரியான நேரத்திற்கு EMI செலுத்தி கடனை விரைவில் அடைத்து விடலாம். மேலும், வட்டி உயர்வு காரணமாக EMI செலுத்த சிரமப்படுகிறீர்கள் என்றால் கடன் காலத்தை நீட்டிப்பது குறித்து  வங்கி அதிகாரிகளிடம் கலந்துரையாடுவது மூலம் உங்கள் மாதாந்திர EMI தொகையைக் குறைக்க உதவும். இதை தொடர்ந்து அதிக வட்டி விகிதற்கு வாங்கிய கடன்களுக்கு முன்னுரிமை கொடுங்கள், அது  உங்கள் செலவுகளை குறைத்து, சேமிப்பை அதிகரிக்கும்.

மேலும் உங்களின் அனைத்து சிறிய கடன்களையும் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய கடனாக மாற்றுவதால் வட்டி விகிதத்தைக் குறைவது மட்டுமின்றி ஒரே EMI யில் பல கடனை செலுத்தலாம். உதாரணமாக, வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன்களை ஒருங்கிணைத்து ஒரே EMI செலுத்துதல் போன்றவை.
மேலும் ஏதேனும் கடன் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க  நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று உங்களுக்கான திட்டத்தை உருவாக்கி அதைப் பின்பற்றினால் கடன் சுமையில் இருந்து விரைவில் விடுபட முடியும்.

 

                  Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!