வந்தாச்சு பறக்கும் ரயில் சேவை..!! அடுத்த ஆண்டில் இருந்து பயணிகள் பறக்கலாம்”..முழு விவரம் உள்ளே”..!!
தமிழகத்தில் பறக்கும் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தகவல் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் சென்னை கடற்கரை-எழும்பூர் பகுதிகளில் செல்லும் 4வது ரயில் பாதை பணிகளுக்காக, சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே இயக்கப்பட்டு வந்த நிலையில் , தற்போது வேளச்சேரி-பரங்கிமலை இடையே “பறக்கும் ரயில்” சேவை அடுத்த ஆண்டு 2025 மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2008ம் ஆண்டில் ரூ.495 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, சற்று காலதாமதம் ஆனதால் தற்போது ரூ.734 கோடியாக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


























