முதல்முறையாக ரசிகர்களுக்காக அர்ஷ்ஷின் முகத்தை காட்டிய ஆலியா – வைரலாகும் வீடியோ!
தற்போது தான் ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்கள் பலரும் குழந்தையை காட்டும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதனால் முதல்முறையாக ரசிகர்களுக்காக அர்ஷ்ஷின் முகத்தை ஆலியா காட்டியுள்ளார்.
அர்ஷ்ஷின் முகத்தை காட்டிய ஆலியா
ஒரே சீரியலில் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக தான் அறிமுகமானார்கள். இவர்களுக்கு ஐலா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது. ராஜா ராணி தொடரை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 தொடரில் ஆலியா நடித்து கொண்டிருந்தார். அதற்கு பிறகு மீண்டும் ஆலியா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருந்த நிலையிலும் கூட ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார்.
பிரசவ அறையிலும் துணிச்சலாக குழந்தையை பார்க்க போகும் சந்தோஷத்தில் ஆலியா – வைரலாகும் வீடியோ!
பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆண் குழந்தையாக இருந்தால் அர்ஷ் எனவும், பெண் குழந்தையாக இருந்தால் லைலா எனவும் பெயர் வைக்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி இரண்டாவது குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த முதல் நாளே சஞ்சீவ் குழந்தையை வாங்கும்படியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
சிகிச்சை எடுப்பதற்கு முன்பாகவே கருவுற்ற முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
ரசிகர்கள் பலரும் குழந்தை யாரை போல இருக்கிறார் என கேட்டனர். அதற்கு ஆலியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் கூறியுள்ளார். ஐலா பாப்பா சஞ்ஜீவ்வை உரித்து வைத்ததை போல இருந்தார். ஆனால் அர்ஷ் அப்படியே என்னை போலவே தான் இருக்கிறார் என கூறியுள்ளார். மேலும், முதன் முதலில் ரசிகர்களுக்காக அர்ஷ்ன் முகத்தை காட்டியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.