சிகிச்சை எடுப்பதற்கு முன்பாகவே கருவுற்ற முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

0
சிகிச்சை எடுப்பதற்கு முன்பாகவே கருவுற்ற முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
சிகிச்சை எடுப்பதற்கு முன்பாகவே கருவுற்ற முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ ரிலீஸ்!
சிகிச்சை எடுப்பதற்கு முன்பாகவே கருவுற்ற முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!

இயற்கையாக முல்லையால் கருவுற முடியாது என மருத்துவர் கூறியதால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என குடும்பத்தினர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் சிகிச்சை எடுப்பதற்கு முன்பாகவே முல்லை கருவுறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் தற்போது தான் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்கிற விஷயம் தான் தற்போது கடந்த சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என மருத்துவர் கூறிவிடுகிறார். சில நாட்கள் முல்லையிடமிருந்து கதிர் இந்த விஷயத்தை மறைத்து வந்தார். ஆனால் மருத்துவர் கொடுத்த ரிபோர்ட்டை படித்து தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்கிற விஷயத்தை முல்லை அறிந்து கொள்கிறார்.

எழில் படத்திற்கு வராத கோபி, கேள்வி கேட்ட ஈஸ்வரி, கோவத்தில் பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் நாளைய எபிசோட்!

இதற்கு மேலும் இந்த வீட்டில் இருந்து எந்த பயனும் இல்லை என நினைத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். பின்னர் முல்லையை சமாளித்து கதிர் வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதற்கு பிறகு செயற்கை முறையில் சிகிச்சை எடுத்தாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர். செயற்கை முறையில் சிகிச்சை எடுக்க அதிகமாக செலவாகும் என்பதால் வீடு கட்டும் பிளானை பாதியில் நிறுத்தியுள்ளனர். வீடு கட்டும் பிளான் பாதியில் நின்றது அனைவருக்கும் வருத்தத்தை கொடுத்தாலும் அனைவருமே ஒப்புக்கொண்டனர்.

ஆல்யா மனசா செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த சஞ்சீவ் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

செயற்கை முறையில் சிகிச்சை எடுத்த பிறகு முல்லை கருவுருவார் என எதிர்ப்பார்த்த சமயத்தில் தற்போது ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதாவது செயற்கை முறையில் சிகிச்சை எடுப்பதற்கு முன்பாகவே முல்லை கர்ப்பமாகிறார். முல்லையாலேயே கருவுற்ற விஷயத்தை நம்ப முடியவில்லை. ஆனாலும் மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று அறியாமல் கத்தி அழுகும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here