இன்று மாலை வலுப்பெறும் புயல்..!! ” வானிலை மையம் எச்சரிக்கை….பீதியில் மக்கள்”…!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “ஃபெங்கல்” புயலாக இன்று மாலை வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது, சற்று மணி நேரத்திற்கு முன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்தது, தற்போது 10 கிலோ மீட்டராக குறைந்துள்ளதால், இன்று மாலை 5.30 மணி அளவில் ஃபெங்கல் புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவில் நிலை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



























