NMMS கல்வி உதவித்தொகை தேர்வு நுழைவுச்சீட்டு – இன்று முதல் பதிவிறக்கம்!!

0
NMMS கல்வி உதவித்தொகை தேர்வு நுழைவுச்சீட்டு - இன்று முதல் பதிவிறக்கம்!!
NMMS கல்வி உதவித்தொகை தேர்வு நுழைவுச்சீட்டு - இன்று முதல் பதிவிறக்கம்!!
NMMS  கல்வி உதவித்தொகை தேர்வு நுழைவுச்சீட்டு – இன்று முதல் பதிவிறக்கம்!! 

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்டத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய திறனறிதல் தேர்வுக்கு இன்று முதல் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

NMMS தேர்வு:

2020-2021ம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழங்கும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடக்க இருப்பதாக ஜனவரி மாதம் அரசு தேர்வுத்துறை இயக்குனரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வுகள் பிப்ரவரி மாதம் 21ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அவர்களின் மேல்நிலைப்பள்ளி கல்வி முடியும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் திறனறிப் போட்டி – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

விண்ணப்பம்:

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க முதலில் ஜனவரி 8ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் மாணவர்களின் கோரிக்கை கருதி ஜனவரி 20ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்தது. மேலும், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களின் விவரங்களையும் இணையம் வழியாக அரசுத்தேர்வுகள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நுழைவுச் சீட்டு:

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிதல் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை www.dge.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆசிரியர்கள் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து மாணவர்களிடம் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நுழைவுச் சீட்டில் திருத்தங்கள் இருந்தால் அது குறித்தும் ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!