திருச்சி, தூத்துக்குடிக்கு கூடுதல் விமான சேவைகள் இயக்கம்…சென்னை விமான நிலையம் அதிரடி அறிவிப்பு

0
????????, ???????????????? ??????? ????? ??????? ???????...?????? ????? ??????? ?????? ?????????
திருச்சி, தூத்துக்குடிக்கு கூடுதல் விமான சேவைகள் இயக்கம்...சென்னை விமான நிலையம் அதிரடி அறிவிப்பு

திருச்சி, தூத்துக்குடிக்கு கூடுதல் விமான சேவைகள் இயக்கம்…சென்னை விமான நிலையம் அதிரடி அறிவிப்பு

நாட்டில் உள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான, சென்னை விமான நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு பயணிக்கும் பயணிகளின்  எண்ணிக்கை  நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே, சென்னை விமான நிலையத்தில் இருந்து  பயணிகளின் தேவைக்கேற்ப, கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது  சென்னை – தூத்துக்குடிக்கு இடையே நாள்தோறும் 8 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இது, வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி முதல் 12 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் பூமிக்கு திரும்பும் விண்வெளி வீரர்கள்…!! NASA வெளியிட்ட அதிரடி தகவல் …!! எப்போது தெரியுமா…?

மேலும், “சென்னை – திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும்  விமானங்களின் எண்ணிக்கை வருகின்ற மார்ச் 22 தேதி முதல்  14 லிருந்து 16 ஆக அதிகரிக்க உள்ளதாகவும்”  தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருச்சி செல்லும் இந்த கூடுதல் விமான சேவைகள் இருமார்க்கமாக இயங்க உள்ளதாகவும், பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி பயனடையுமாறும் சென்னை விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!