“இவிஎம் இயந்திரங்களை யாரும் ஹேக் செய்ய முடியாது” – தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) யாரும் ஹேக் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
EVM இயந்திரங்கள் இணையத்துடன் இணைக்கப்படாத தனித்தனி சாதனங்களாக செயல்படுகின்றன. இதனால் இணையம் அல்லது தொலைதூர அணுகல் மூலம் இயந்திரங்களை ஹேக் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் செயல்முறையில் EVM-களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
EVM குறித்து அவ்வப்போது எழும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையரின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தல் நடைமுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை தொடர்ந்து முக்கிய விவாதமாக இருந்து வருகிறது.



























