தமிழக அரசில் Case Worker வேலை – சம்பளம்: ரூ.18,000/- || உடனே விரையுங்கள்!
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும் (One Stop Centre) மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Case Worker, Security, Multipurpose Helper பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Case Worker (2), Security (1), Multipurpose Helper (1) பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Case Worker – Bachelor’s degree in Law / Social Work / Sociology / Social Science / Psychology
Security – எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Multipurpose Helper – எழுத படிக்க தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.18,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
- தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.02.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



























