HCL நிறுவனத்தில் ஜூன் 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 12ம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்!

0
HCL நிறுவனத்தில் ஜூன் 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - 12ம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்!
HCL நிறுவனத்தில் ஜூன் 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் - 12ம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்!
HCL நிறுவனத்தில் ஜூன் 3ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – 12ம் வகுப்பு மாணவர்களும் பங்கேற்கலாம்!

கோவை மாவட்டத்தில் நாளை ஹெச்.சி.எல். நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது 5ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்பவர்கள் தங்களின் கல்வி சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் அனைத்து துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதே போல ஐடி துறையிலும் வேலைவாய்ப்புகளும் சம்பள உயர்வும் கணிசமாக அதிகரித்தது. முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்.சி.எல் போன்றவை தொடர்ந்து வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஹெச்.சி.எல் நிறுவனம் கோவை மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாம் 12ம் வகுப்புகளுகான சிறந்த வாய்ப்பாக உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் முகமானது கோவை மாவட்டம் சங்காநல்லூர், எச்ஐஎச்எஸ் காலனி சாலையில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மஹா வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். மேலும் இவர்கள் பொது கணிதம் அல்லது வணிகக் கணிதம் பயின்றவர்களாக இருக்க வேண்டும். ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருவோர் 11ம் வகுப்பு மதிப்பெண் சான்று, நடப்பாண்டு பிளஸ் 2 பயின்றவர்கள் ஹால் டிக்கெட், மாணவர், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முன்பதிவின் போது மோசடிகளை தவிர்க்கும் வழிமுறைகள் இதோ

தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு தொழிலை தொடர விரும்பும் 12ம் மாணவர்களுக்கான ஒரு திட்டமாகும். இதில், சேர்ந்த மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையின் அடிப்படை திறன் பயிற்சியை முடித்த பிறகு, ஹெச்.சி.எல். நிறுவனத்தில் முழு நேர வேலையில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் வகுப்பறை பயிற்சிக்கு பிறகு, 6 முதல்12 மாத காலம் ‘இன்டென்ஷிப்’ பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன் பணிக்கேற்ப ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!