
எதிர்பாராத தேவைகளை சரி செய்ய உதவும் எமர்ஜென்சி ஃபண்ட்.. சேமிக்கும் வழிமுறைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..
எதிர்பாராத நிகழ்வுகளுக்கான நிதியை சமாளிக்க நிலையான வைப்பு (FD) அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்த விருப்பமாக மக்கள் கருதுகின்றனர். பிக்சட் டெபாசிட் போலவே அவசரநிலை செலவுகளை எதிர்கொள்ள “எமர்ஜென்சி ஃபண்ட்” உதவுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு தனிநபரும் இந்த அவசரகால நிதியில் குறைந்த அளவு பணத்தைச் சேர்த்தால், எதிர்பாராத மருத்துவ செலவுகளை சீராக்க இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
அதாவது ஒருவர் அவசரகால நிதியை அமைக்க விரும்பினால், அவர் முதன்மை செலவுகளான வீட்டு பராமரிப்பு செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள், வங்கிகளில் செலுத்த வேண்டிய EMI-கள், காப்பீடு பிரீமியத் தொகைகள் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். மேலும், அவசர நிதியாக உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப சிறிய தொகையில் பணத்தை சேமிப்பது நல்லது. பின்னர் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை இந்த அவசரகால நிதிகான தொகையை வங்கியில் FD வடிவில் அல்லது ஏதேனும் லிக்விட் ஃபண்ட், ஷார்ட் டெர்ம் ஃபண்டுகளில் முதலீட்டு வடிவில் சேமிக்க வேண்டும். மேலும், இந்த அவசரகால நிதியை அமைப்பதன் முக்கியமான அம்சம், அது உருவாக்கும் வருமானத்தை விட அதன் மூலம் கிடைக்கும் உடனடித் தேவைகளை சரிசெய்ய உதவும் தன்மையே என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.























