தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசின் சார்பில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த பிபர்வரி மாதம் பணியில் சேர்ந்த 3,000 ஆசிரியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை முக்கிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முக்கிய உத்தரவு:

கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பணி நிரவல், இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. தமிழக பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் உத்தரவுப்படி சில மாவட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் ஆசிரியர்கள் இடம் மாற்றப்பட்டனர். அதன்படி, 3,000 ஆசிரியர்கள் கூடுதல் இடங்களில் பதவியேற்றனர். புதிய பணியிடங்களில் சேர்ந்த 3,000 ஆசிரியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அப்போது நிதித்துறை அரசாணை இல்லாமல் புதிய இடங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தது. இது குறித்து பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் அறிக்கை ஓன்று வெளியானது.

Kotak Mahindra வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேவை நிறுத்தம்!

அந்த அறிக்கையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடந்தது. அதில், காலிப்பணியிடங்களை தேர்வு செய்து அதற்கான ஆணைகளை பெற்று, புதிய பணியிடங்களில் ஆசிரியர்கள் சேர்ந்தனர். மாநிலம் முழுவதும் பணியிடங்களில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தமிழக பள்ளிக் கல்வித்துறையில், இத்தகைய அவல நிலை, இதற்கு முன்னர் எப்போதும் நடந்தது இல்லை. அதாவது காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று தெரிந்து அவற்றை சரி செய்ய, இரண்டரை மாதங்களாகியும் முடியவில்லை.

Exams Daily Mobile App Download

எனவே பள்ளிக்கல்வித்துறை மெத்தன போக்கை உடனடியாக கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு 17ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். இல்லையெனில், 18ம் தேதி (நேற்று) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 3000 ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டு பணி நீட்டிப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா நேற்று பிறப்பித்துள்ளார். மேலும், ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!