
மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் அதிக சம்பாதிக்க நினைக்குறீங்களா..? அப்போ இது தான் உங்களுக்கான திட்டம்..!!
மியூச்சுவல் பண்ட்ஸ் என்பது பங்குகள் மற்றும் அதன் தொடர்பான கருவிகளில் முதலீடு செய்வதாகும். மேலும், ஒரே நேரத்தில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்வதை விட, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து லாபம் பெற மியூச்சுவல் பண்ட்ஸ் உதவுகிறது. அந்த வகையில் அதிக லாபம் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு “இ.எல்.எஸ்.எஸ். மியூச்சுவல் ஃபண்ட்கள்” (ELSS Mutual Funds) சிறந்த தேர்வாக இருக்கும். அது மட்டுமின்றி வருமான வரிச் சட்ட பிரிவு 80 சி இன் கீழ் ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற உதவுகிறது. இந்த திட்ட பங்குகள் பல்வேறு நிறுவங்களால் விற்கப்படுகிறது.
மேலும், “டாடா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு திட்டத்தில்” (TATA ELSS Savings Scheme) மாதந்தோறும் ரூ.10,000 SIP முதலீடு செய்தால் 18 ஆண்டுகளில் ரூ.1.53 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இந்த திட்டம் ஸ்டேட் வங்கியில் வருடத்துக்கு 30% வரை வருவாய் தரக்கூடிய சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாக உள்ளது. இதை தொடர்ந்து “டி.எஸ்.பி-யின் இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில்” (DSB ELSS Fund) ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாயை முதலீடு செய்துவந்தால் 17.14 சதவீத வருமானம் அதாவது ரூ.1.24 கோடி வரை வருடாந்திர ரிட்டன் தரக்கூடியது என செபி (SEBI) அங்கீகாரம் பெற்ற பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.


























