
தொழிலாளியா நீங்கள்..? அப்போ உங்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க..!! முழு விவரம் உள்ளே..!!
மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அத்திட்டங்களில் ஒன்று தான் இ-ஷ்ரம் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் நலிவடைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ . 1000 வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் ரூ. 2 லட்சம் வரை காப்பீடும் வழங்கப்படுகிறது . அத்துடன், வீட்டு பணியாளர் உள்ளிட்ட பிற தொழிலாளர்களுக்கும் இதே சலுகை வழங்கப்படுகிறது.
போட்டியின்றி பாஜக தலைவராக தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்..!! இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு…!!
இத்தகைய பலன்கள் நிறைந்த இ-ஷ்ரம் அட்டையை பெற விரும்புவோர் ஆதார், பான் போன்ற முக்கிய ஆவணங்களுடன் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலமாகவும் அல்லது https://eshram.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் விண்ணப்பித்து பலனை பெறலாம்.


























