
டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்பு.. இந்திய பங்குச் சந்தையில் விழுந்த பேரிடி.. நிபுணர்கள் தெரிவித்த முக்கிய தகவல்..!!
பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்கா வரிகளை மாற்றி அமைக்கப்போவதாக அதிபர் டிரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்தார். இதன் எதிரொலியாக உலக பொருளாதாரத்தில் இந்திய பங்குச்சந்தை தொடர்ச்சியான விற்பனை அழுத்தத்தை சந்தித்துள்ளன.
அதாவது, ட்ரம்பின் பரஸ்பர கட்டண விதிப்பு காரணமாக ஆசிய நாடுகளுக்கு இடையே, இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி “கடந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளிகிழமைகளில் சென்செக்ஸ் 930.67 புள்ளிகளும், நிஃப்டி 345.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, இன்று (07-04-2025) காலை இந்திய பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 72,122 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்”.

























