சென்னையில் இன்றும் நாளையும் ரயில்கள் ரத்து.. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தின் தலைநகரான சென்னை பரபரப்பான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது சகஜம். இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக அரசு மின்சார ரயில்கள் அமல்படுத்தியது. இதன் மூலம் குறைந்த விலையில் நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய முடியும் என்பதால் பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
திருச்சியில் 6 வழி சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்.. அமைச்சர் நேரு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
அதாவது, “சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் அமையவுள்ள புதிய ரயில்வே மேம்பாலம் பணிகள் காரணமாக சென்னை வேளச்சேரி, ஆவடி மற்றும் திருவாரூர் மார்க்கம் வழி செல்லும் மின்சார ரயில்கள் இன்று (17-05-2025) இரவு 10 மணி முதல் மே 18 ஆம் தேதி காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது”. எனவே இந்த 3 வழியே இன்று செல்லவிருந்த 4 ரயில்களும், நாளை செல்லவிருக்கும் 13 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























