
BREAKING NEWS:புயல் காரணமாக அனைத்து மக்களுக்கும் ரூ. 5000 வழங்கும் அரசு…!! ” முதல்வர் அதிரடி அறிவிப்பு”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “ஃபெஞ்சல்” புயலாக வலுப்பெற்றதை தொடர்ந்து, நேற்று புயல் மேற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்தது. இதனால், சென்னை, புதுச்சேரி முதலிய இடங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. மேலும், புயல் எதிரொலியாக, புதுச்சேரியில் உள்ள சில பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுவதால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
அந்த வகையில், தற்போது புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, வெள்ளத்தால் உயிரிழந்த 1 மாட்டுக்கு ரூ.40,000, இளம் கன்றுக்கு ரூ.30,000 மற்றும் 1 ஹெக்டேர் விவசாய நிலத்திற்கு ரூ.30,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


























