
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம் அறிவிப்பு…!! அதிரடி மொழி கட்டுப்பாட்டை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப் …!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 2021 ஆம் ஆண்டு அதிபராக பதவி வகித்த போது அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. எனவே, தற்போது மீண்டும் அதிபராக பதவியேற்றதால், “அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கில மொழியை” அறிவித்துள்ளார். இது, அமெரிக்காவில் புலம் பெயர்ந்தவர்களிடையே கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், “ஆங்கிலம் என்ற ஒரே மொழியில் மக்கள் கருத்துக்களை பகிர்கையில், நாடு பலப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அமெரிக்காவில் ஏராளமான மொழிகள் நுழைந்து விட்டதாகவும், இது நாட்டிற்கு நல்லது இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “அமெரிக்காவை பொறுத்தவரை, 1980 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், ஆங்கிலம் தவிர்த்து மற்ற மொழிகள் பேசுபவர்களின் எண்ணிக்கை தற்போது 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும்” தகவல் வெளியிட்டுள்ளார்.


























