
சென்னை மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA Chennai) ஆட்சேர்ப்பு 2025 | Para Legal Volunteer பணியிடங்கள் | தினசரி ₹750 ஊதியம்
சென்னை மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் (DLSA Chennai) தன்னார்வ Para Legal Volunteer பணியாளர்களை தேர்வு செய்ய 2025 ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் நீதிமுறை சேவைகள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பரப்ப விரும்பும் விண்ணப்பதாரர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள். தேர்வு நேர்காணல் மூலம் நடைபெறும் மற்றும் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு தினசரி ₹750 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி 31 அக்டோபர் 2025.
காலியிடங்கள்
-
பணியின் பெயர்: Para Legal Volunteer
-
மொத்த காலியிடங்கள்: பல பணியிடங்கள் (Various Posts)
கல்வித் தகுதி
-
விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து பெற்ற சான்றிதழ் இருக்க வேண்டும்.
Age Limit
-
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
சம்பள விவரம்
-
₹750/- நாள் ஒன்றுக்கு (Per Day) வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
-
எந்தவித கட்டணமும் இல்லை.
தேர்வு செயல்முறை
-
நேர்காணல் (Interview) மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
-
அதிகாரப்பூர்வ இணையதளமான chennai.dcourts.gov.in சென்று அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யவும்.
-
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைக்கவும்.
-
விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு 31.10.2025க்குள் அனுப்ப வேண்டும்.
முகவரி:
Chairman / Principal Judge,
District Legal Services Authority,
North Fort Road, ADR Building,
Chennai – 600104.

























