தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது – அரசு அதிர்ச்சி அறிவிப்பு!

2
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது - அரசு அதிர்ச்சி அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது - அரசு அதிர்ச்சி அறிவிப்பு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது – அரசு அதிர்ச்சி அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் நகை கடன் தள்ளுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யாருக்கெல்லாம் நகை கடன் தள்ளுபடி கிடையாது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நகைக்கடன்:

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். அதன்படி நகை கடன் தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன்களை தள்ளுபடி செய்ய அரசு திட்டமிட்டு கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் வாங்கியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது.

அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் – முக்கிய விவரங்கள் இதோ!

இந்த நிலையில் தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார். விவரங்களை சேகரிக்கும் பணியில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு பொது கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்கியதில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டது. இது குறித்து மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு – தேசிய அளவில் மூவர் முதலிடம்!

நகை கடன் தள்ளுபடி குறித்து மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் நிலையில் நகை கடன் தள்ளுபடி அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆதார் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகை கடன் (5 சவரனுக்கு மேல்) பெற்றுள்ள நபர் மற்றும் அவரது குடும்பத்தினர், எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைதாரர்கள் முதலியவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கிகள் என்பதன் விளக்கம்
    கூட்டுறவு வங்கிகள்
    அல்லது தேசிய வங்கி நகை கடன் சேர்த்தா

  2. விவசாயி கள் கிட்ட மட்டும் தான் அரசு மிக துல்லியமாக கணக்கு பார்க்கும். அரசியல் வாதிகள் கொல்லை அடிக்கிற பணம் எந்த கணக்கில் வரும்.மானங்கெட்ட அரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here