அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் – முக்கிய விவரங்கள் இதோ!

0
அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் - முக்கிய விவரங்கள் இதோ!
அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் - முக்கிய விவரங்கள் இதோ!
அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் – முக்கிய விவரங்கள் இதோ!

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி, அரசு ஊழியர் திடீர் மரணம் அடைந்த குடும்பத்திற்கு உடனடியாக நிதியுதவி வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

குடும்ப ஓய்வூதியம்:

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை என்பது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் குறித்த கொள்கையை உருவாக்குவதற்கான குறிப்பிட்ட துறையாகும். அரசு ஊழியர்கள் இறப்பின் பின்னர் அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால் ஒரு சில காரணங்கள் மற்றும் செயல்முறையினால் ஓய்வூதியம் கிடைக்க தாமதம் ஆகி விடுகிறது. இதனால் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு – தேசிய அளவில் மூவர் முதலிடம்!

இந்த அறிக்கையின் படி, அரசு ஊழியர் திடீர் மரணம் அடைந்த குடும்பத்திற்கு உடனடியாக நிதியுதவி வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது அரசு ஊழியர் குடும்பத்திற்கு சிரமத்தை தவிர்க்கும் வகையில், விதி 80-ஏ விதியில் தளர்த்தப்பட்டுள்ளது. இறப்புச் சான்றிதழுடன் தகுதியான குடும்ப உறுப்பினரிடமிருந்து அலுவலகத்தின் தலைவர் கோரிக்கை மனுவை பெற்றவுடன் அதன் உண்மை தன்மை குறித்து அவர் திருப்தி அடைந்தால், அவர் தற்காலிக குடும்ப ஓய்வூதியத்தை அனுமதிக்கலாம் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை தெரிவித்துள்ளது. குடும்ப ஓய்வூதியத்தின் கணக்கீடு அரசு ஊழியர் இறுதியாக பெற்று வந்த சம்பளத்தின் அடிப்படையில் இருக்கும்.

தீபாவளி விற்பனை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!

மேலும் அலுவலக தலைவர், குடும்ப ஓய்வூதிய வழக்கு, படிவம்-18 மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை PAO க்கு சமர்ப்பிக்க காத்திருக்கக் கூடாது என்றும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தெரிவித்துள்ளது. ஓய்வூதியம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், அதில் ஏதேனும் எழுத்துப் பிழை இருப்பின், திருத்தம் அவசியமானால் தவிர குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பாதகமாக மாற்றப்படக் கூடாது என்று ஓய்வூதியர் நலத்துறை அறிவித்துள்ளது. எழுத்துப் பிழையின் காரணமாக திருத்தம் தேவையா? இல்லையா? என்பதை நிர்வாக அமைச்சகம் முடிவு செய்ய வேண்டும் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!