Direction and Distance in Tamil

0

Direction and Distance in Tamil (திசை மற்றும் தூரம் காணுதல்)

இங்கே TNPSC, RRB, Bank தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
  1. காலையில் சூரிய உதயத்திற்குப்பின் ராமன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது அவரது நிழல் சரியாக அவருக்குப் பின்னால் விழுகிறது. இப்பொழுது அவர் வலப்புறம் திரும்பி கொஞ்ச தூரம் சென்றபின் மீண்டும் வலப்புறம் திரும்பி நடக்கிறார் எனில் இப்பொழுது எந்த திசையில் நடக்கிறார்?

அ) வடக்கு ஆ) மேற்கு இ) கிழக்கு ஈ) தெற்கு

2. ரவியின் வீடு ராமனின் வீட்டிற்கு வலப்புறத்தில் 20 மீட்டர் தொலைவில் ஒரே மாதிரியாக வடக்கு முகமாக உள்ளது. கார்த்திக் வீடு ராமன் வீட்டிற்கு வடகிழக்காக 25 மீட்டர் தொலைவில் உள்ளது. எனில் கார்த்திக் வீட்டிற்கு ரவியின் வீடு எந்த திசையில் உள்ளது?

அ) கிழக்கு ஆ)மேற்கு இ) தெற்கு ஈ) வடக்கு

3. ஒருவர் கிழக்கு நோக்கி 5 கி.மீ சென்று பின்பு தென்மேற்கு திசையில் திரும்பி 5 கி.மீ சென்று பின்பு மீண்டும் வடமேற்கு திசையில் திரும்பி 5 கி.மீ சென்று ஒரு இடத்தில் இருக்கிறார் எனில் அவர் எங்கு தற்பொழுது இருப்பார்?

அ) கிழக்கில் ஆ) மேற்கில் இ)தெற்கில்  ஈ) புறப்பட்ட இடத்தில்

4. ராஜா என்பவர் மோட்டார் சைக்கிளில் 20 கி.மீ தெற்கு நோக்கிச் செல்கிறார். பின்பு வலது புறமாக திரும்பி 10 கி.மீ செல்கிறார். அடுத்து வலது புறமாக திரும்பி 20 கி.மீ செல்கிறார். பின்பு இடது புறமாக திரும்பி 20 கி.மீ. செல்கிறார் என்றால் அவர் புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்க முடியும்?

அ) 20 கி.மீ ஆ) 30 கி.மீ இ) 35 கி.மீ ஈ) 40 கி.மீ

5. 0 என்ற புள்ளியிலிருந்து முத்து 5 கி.மீ தெற்காகச் சென்று பின்பு வலப்புறமாக 3 கி.மீ சென்று பின்பு மீண்டும் வலப்புறமாக 5 கி.மீ சென்று பின்பு இடப்புறமாக 5 கி.மீ சென்றுள்ளார் எனில் தொடங்கிய புள்ளியிலிருந்து எவ்வளவு தொலைவில் எந்த திசையில் இருப்பார்?

அ) 5 கி.மீ மேற்கு ஆ) 5 கி.மீ கிழக்கு இ) 3 கி.மீ கிழக்கு ஈ) 8 கி.மீ மேற்கு

6. குமார் கிழக்கு நோக்கி 8 கி.மீ நடந்து தென்மேற்காக திரும்பி மீண்டும் 8 கி.மீ நடந்து பின்பு வடமேற்காக திரும்பி 8 கி.மீ நடந்தார். எனில் தற்பொழுது குமார் தொடங்கிய புள்ளியிலிருந்து எந்த திசையில் இருப்பார்?

அ) வடமேற்கு ஆ) கிழக்கு இ) மேற்கு ஈ) தென்கிழக்கு

7. மாத்தூரிலிருந்து 20 கி.மீ வடக்காக கீரணூர் உள்ளது. மாத்தூரிலிருந்து 8 கி.மீ கிழக்காக திருச்சி உள்ளது. கீரணூரிலிருந்து புதுக்கோட்டை 12 கி.மீ மேற்காக உள்ளது. முருகன் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்கிறார். எனில் தொடங்கிய புள்ளியிலிருந்து எந்த திசையில் இருப்பார்?

அ) வடக்கு ஆ) வடமேற்கு இ) தெற்கு ஈ) தென்மேற்கு

8. P என்ற புள்ளியிலிருந்து வாசு தெற்கு நோக்கி 40 மீ நடந்த பின் இடதுபுறமாக திரும்பி 30 மீ நடந்து கு என்ற புள்ளியை அடைகிறார். எனில் P என்ற புள்ளியிலிருந்து கு என்ற புள்ளி எந்த திசையில் அமைந்திருக்கும்?

அ) தென்மேற்கு ஆ) வடகிழக்கு இ) வடமேற்கு ஈ) தென்கிழக்கு

9. ஒரு பேருந்து 20 கி.மீ தெற்கு நோக்கிச் சென்று பின்பு வலது புறமாக திரும்பி 30 கி.மீ செல்கிறது. அடுத்து இடதுபுறமாக திரும்பி 20 கி.மீ செல்கிறது. பின்பு இடதுபுறமாக திரும்பி 30 கி.மீ செல்கிறது எனில் பேருந்து புறப்பட்ட இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கும்?

அ) 100 கி.மீ ஆ) 50 கி.மீ இ) 40 கி.மீ ஈ) 30 கி.மீ

10. A, B, C, D ஆகியோர் சீட்டு விளையாடுகின்றானர். இதில் A மற்றும் C இருவரும் ஒரே அணியினர். D வடக்கு பார்த்து உள்ளார். A மேற்கு பார்த்து உள்ளார் எனில் தெற்குப் பார்த்து உள்ளவர் யார்?

அ) B ஆ) C இ) D ஈ) போதிய விபரம் இல்லை

11. குணால் வடதிசை நோக்கி 10KM நடக்கிறார். அதிலிருந்து அவன் 6KM தென்திசை நோக்கி நடக்கிறான். இப்பொழுது அவன் 3KM கிழக்குதிசை நோக்கி நடக்கிறான். தற்பொழுது அவன் ஆரம்பப் புள்ளியிலிருந்து எந்த திசையில் எவ்வளவு தூரம் சென்றிருப்பான்?

அ) 5KM மேற்கு ஆ) 7KM மேற்கு இ) 7KM கிழக்கு ஈ) 5KM வடகிழக்கு

12. ஒருவர் தெற்குதிசையை நோக்கி நிற்கிறார். அவர் 135° கடிகார எதிர்திசையில் திரும்புகிறார். அப்படியானால் அவர் 180º கடிகார திசையில் திரும்பி நிற்கிறார். இப்பொழுது எந்த திசையில் நிற்கிறார்?

அ) வடகிழக்கு ஆ) வடமேற்கு இ) தென்கிழக்கு ஈ) தென்மேற்கு

13. மணி 40 மீட்டர் வடக்கு நோக்கி நடக்கிறான். அவன் இடதுபுறமாக திரும்பி 20 மீட்டர் நடக்கிறான். மறுபடியும் அவன் இடதுபுறம் திரும்பி 40 மீட்டர் நடக்கிறான். அப்படியானால் அவன் ஆரம்ப புள்ளியிலிருந்து எந்த திசையில் எவ்வளவு தூரம் சென்றிருப்பான்?

அ) 20மீ வடக்கு ஆ) 20மீ தெற்கு இ) 100மீ தெற்கு ஈ) இதில் எதுவுமில்லை

14. வேலன் அவனது வீட்டில் இருந்து 15 கி.மீ மேற்கு திசையை நோக்கி சென்றான். பின்பு இடது புறமாக திரும்பி 20 கி.மீ நடக்கிறான். அவன் இப்பொழுது கிழக்கு நோக்கி திரும்பி 25 கி.மீ நடக்கிறான். இறுதியாக அவன் இடதுபுறம் திரும்பி 20 கி.மீ நடக்கிறான். அப்படியானால் அவன் அவனது வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் சென்றிருப்பான்?

அ) 5 கி.மீ ஆ) 10 கி.மீ இ) 40 கி.மீ ஈ) 80 கி.மு

15. நான் தெற்கு திசையை நோக்கி நிற்கிறேன். பின் நான் வலது புறம் திரும்பி 20 மீட்டர் நடக்கிறேன். நான் மறுபடியும் வலது புறம் திரும்பி 10 மீட்டர் நடக்கிறேன். இப்பொழுது நான் இடதுபுறம் திரும்பி 10 மீட்டர் நடந்தேன். மறுபடியும் வலதுபுறம் திரும்பி 20 மீ நடந்தேன். இப்பொழுது வலதுபுறம் திரும்பி 60 மீ நடந்தேன். இப்பொழுது நான் ஆரம்ப புள்ளியிலிருந்து எந்த திசையில் நிற்கிறேன்?

அ) வடக்கு ஆ) வடமேற்கு இ) கிழக்கு ஈ) வடகிழக்கு

16. அருள் 30 மீ கிழக்கு திசையை நோக்கி நடந்தான். அவன் வலது புறம் திரும்பி 40மீ நடந்தான். இப்பொழுது இடதுபுறம் திரும்பி 30 மீ நடந்தான். இப்பொழுது அருள் ஆரம்ப திசையிலிருந்து எந்த திசையை நோக்கி நிற்கிறான்?

அ) வடகிழக்கு ஆ) கிழக்கு இ) தென்கிழக்கு ஈ) தெற்கு

17. ஒருவர் 1 கி.மீ கிழக்கு திசையை நோக்கி நடக்கிறார். பின் அவர் தெற்கு திசையை நோக்கி திரும்பி 5 கி.மீ நடக்கிறார். மறுபடியும் கிழக்கு திசையை நோக்கி 2 கி.மீ நடக்கிறார். அதன்பின் வடக்கு திசையை நோக்கி 9 கி.மீ நடக்கிறார். இப்பொழுது அவர் ஆரம்ப புள்ளியிலிருந்து எவ்வளவு தூரம் இருப்பார்?

அ) 3 கி.மீ ஆ) 4 கி.மீ இ) 5 கி.மீ ஈ) 7 கி.மீ

18. நான் கிழக்கு நோக்கி நிற்கிறேன். நான் 100º கடிகார திசை மற்றும் 145º கடிகார எதிர்திசையில் நிற்கிறேன். இப்பொழுது நான் எந்த திசையில் நிற்கிறேன்?

அ) கிழக்கு ஆ) வடகிழக்கு இ) வடக்கு ஈ) மேற்கு

19. நீ வடக்கு நோக்கி செல், வலப்பக்கம் திரும்பு, மறுபடியும் வலப்பக்கம் திரும்பு. இப்பொழுது இடதுபக்கம் திரும்பு. இப்பொழுது எந்த திசையை நோக்கி நிற்கிறாய்?

அ) வடக்கு ஆ) தெற்கு இ) கிழக்கு ஈ) மேற்கு

10. ஒருவர் வடமேற்கு திசையை நோக்கி நிற்கிறார். அவர் 90º கடிகார திசை மற்றும் 135º கடிகார எதிர்திசையில் திரும்புகிறார் என்றால் தற்பொழுது அவர் எந்த திசையை நோக்கி நிற்கிறார்?

அ) கிழக்கு ஆ) மேற்கு இ) வடக்கு ஈ) தெற்கு

21. ரோகன் வடதிசையை நோக்கி 3 கி.மீ நடக்கிறான். அவன் இடப்பக்கம் திரும்பி 2 கி.மீ நடக்கிறான். மறுபடியும் அவன் இடப்பக்கம் திரும்பி 3 கி.மீ நடக்கிறான். மறுபடியும் அவன் இடப்பக்கம் திரும்பி 3 கி.மீ நடக்கிறான். அவன் ஆரம்ப புள்ளியிலிருந்து எவ்வளவு கி.மீ தூரம் நடந்திருப்பான்?

அ) 1கி.மீ ஆ) 2கி.மீ இ) 3கி.மீஈ) 5கி.மீ

22. கார்த்திக் 30மீ வடக்கு நோக்கி நடக்கிறான். அவன் வலப்பக்கம் திரும்பி 40மீ நடக்கிறான். மறுபடியும் அவன் வலப்பக்கம் திரும்பி 20மீ நடக்கிறான். மறுபடியும் அவன் வலப்பக்கம் திரும்பி 40மீ நடக்கிறான். அவன் ஆரம்ப புள்ளியிலிருந்து எவ்வளவு கடந்திருப்பான்?

அ) 0 ஆ) 10 இ) 20 ஈ) 40 அ

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

விடைகள்:

1 2 3 4 5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18 19 20 21 22

Download PDF

To Follow  Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!