LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – குரல் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை!

0
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - குரல் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை!
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - குரல் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை!
LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – குரல் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கொரோனா காரணமாக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது 1000 ரூபாயை தாண்டியுள்ளது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்களின் கட்டணங்களை தற்போது டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் தங்களின் குரல் வழியாகவே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு:

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் பயன்பாடு தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இதன் விலையும் அதிகரித்து வருகிறது. கொரோனா கால கட்டத்தில் இதன் விலை ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்தைத் தொட்டது. அதனால் இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த பாதிப்பு அடைந்தனர். மேலும் இந்த ஆண்டு கொரோனா பரவல் குறையத் தொடங்கியதில் இருந்து படிப்படியாக சிலிண்டர் எரிவாயுவின் விலையும் குறைந்தது. இந்த மாதம் 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை 91.50 ரூபாய் குறைந்து 1907 ரூபாயாக உள்ளது.

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – மார்ச் 20 ஆம் தேதி சிறப்பு முகாம்கள்!

பொதுவாக எரிவாயு சிலிண்டர் புக்கிங் செய்யப்பட்டு அதன்பின் நேரடியாக பணம் பெற்று வசூலிக்கப்படும். தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான பண பரிவர்த்தனையை குரல் வழியாக டிஜிட்டல் முறையில் செலுத்திக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக இன்டர்நெட் வசதி அல்லது ஸ்மார்ட்போன் வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் சுலபமாக பணத்தை செலுத்தலாம்.

மேலும் இன்டர்நெட் பயன்படுத்த முடியாத சூழலில் யூபிஐ மூலமாக பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை UPI123PAY என்பதன் மூலமாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இத்திட்டத்தின் மூலம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கீழ் உள்ள 4 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மிகவும் பயன்பெறுவார்கள். இதற்கு 080-4516-3554 என்ற எண்ணுக்கு சாதாரண மொபைல் மூலம் அழைப்பு மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து இதில் கூறப்படும் வழிமுறையை பின்பற்றி சமையல் சிலிண்டரை புக் செய்து அத்துடன் பணத்தையும் செலுத்த முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!