சமையல் அம்மாவுடன் திருமணம் பற்றி சொல்லும் ஹேமா, சண்டை போடும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
சமையல் அம்மாவுடன் திருமணம் பற்றி சொல்லும் ஹேமா, சண்டை போடும் பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
சமையல் அம்மாவுடன் திருமணம் பற்றி சொல்லும் ஹேமா, சண்டை போடும் பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
சமையல் அம்மாவுடன் திருமணம் பற்றி சொல்லும் ஹேமா, சண்டை போடும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், அடுத்து வரும் எபிசோட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் பாரதி, கண்ணம்மா வீட்டிற்கு வந்து சண்டை போடுவது போல காட்டப்பட்டுள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த கட்டத்திற்கு கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்வார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது லட்சுமி தனது அப்பாவை கண்டுபிடிப்பாளா என்ற திருப்பதுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. என்ன தான் பாரதி கண்ணம்மாவையும் லக்ஷ்மியையும் பிரிந்து இருந்தாலும் அவர்கள் மீது அக்கறை உடன் தான் நடந்து கொள்கிறார். அதை எல்லாம் தெரிந்து வெண்பா கோவத்தில் இருக்கிறார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் லட்சுமி அனைவரின் பேச்சையும் கேட்காமல் தனது அப்பாவை தேட வேண்டும் என முடிவு செய்து அலைந்து கொண்டிருக்கிறார். பலரிடம் உதவி கேட்க யாரும் லக்ஷ்மிக்கு உதவவில்லை. அதனால் அரசு சான்றிதழ் ஏதாவது கிடைக்குமா என லட்சுமி தேடிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் ஹேமா தனது அப்பா வீட்டில் தனியாக இருக்கிறார் என்பதால் அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறாள். அது பற்றி சௌந்தர்யாவிடம் பேச சமையல் அம்மா தான் நல்லவர் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்.

அதனால் ஹேமா சமையல் அம்மாவை டாடிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறாள். அது பற்றி லட்சுமியிடம் பேச ஆனால் என் அப்பா வருவார் என சொல்லி திட்டிவிடுகிறாள். இந்நிலையில் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது. ஹேமா இது பற்றி பாரதியிடம் பேச உடனே கோவப்பட்ட பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். அங்கே ஹேமா மனதை மாற்றி திருமணம் செய்ய பார்க்கிறாய் என சொல்லி சண்டை போடுகிறார். அதெல்லாம் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!