விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெறும் ஒன்றாக இந்நாள் வரை அதற்கான இடத்தை விட்டு கொடுக்காமல் தக்க வைத்து வருகிறது. அதிக எபிசோடுகளை கடந்தும் வெற்றி பயணத்தில் செல்லும் தொடர் என்ற பெருமையும் உள்ளது. அப்பேற்பட்ட சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஒரு நாள் சம்பளம் :

சீரியல் என்றாலே அடுத்தவர் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் வில்லிகள், பரம எதிரிகளை அழிக்க துடிக்கும் வில்லன்கள், மாமியார் மருமகள் சண்டை என அறுத்ததையே அறுக்காமல் புதிதாக அண்ணன் தம்பிகளின் பாசம், அம்மா போன்ற அண்ணியின் அளவுகடந்த அன்பு, மருமகள்களின் ஒற்றுமை, குடும்பத்தை கெடுக்க குடும்பத்தில் உள்ளவர்களே வில்லியாக வலம் வரும் உண்மை நிகழ்வுகளை மிகவும் அழகாக ஒளிபரப்பாக்கி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்.

‘பாக்கியலட்சுமி’ நடிகை சுசித்ரா ரெட்டி கொடுத்த அட்வைஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

இத்தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கான தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது வெளியாகிய கண்ணன், ஐஸு காதல் காட்சிகள் மற்றும் திருமண எபிசோடுகள் ட்ரெண்டாகி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பெற்றது. சிறிய பெட்டி கடையில் ஆரம்பித்த வியாபாரம் இன்று சூப்பர் மார்க்கெட் தொடங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. முக்கிய ரோலில் நடிக்கும் அண்ணி சுஜிதா குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நடிப்பில் புகழ் பெற்றவர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவை தன் பக்கம் இழுத்த மாமனார் – சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

இந்நிலையில், தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு வழங்கும் ஒரு நாள் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, அண்ணி சுஜிதா ஒரு நாளைக்கு ரூபாய் 17 ஆயிரமும், அண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் ஒரு நாளைக்கு ரூபாய் 12 ஆயிரமும், தம்பி ஜீவா ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரமும், அவரது மனைவி மீனா ஒரு நாளைக்கு ரூபாய் 8 ஆயிரமும், இரண்டாவது தம்பி கதிர் ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரமும், அவரது மனைவி முல்லை ஒரு நாளைக்கு ரூபாய் 8 ஆயிரமும், கடைசி தம்பி கண்ணன் ஒரு நாளைக்கு ரூபாய் 6 ஆயிரமும், அவரது மனைவி ஐஸு ஒரு நாளைக்கு ரூபாய் 8 ஆயிரமும் பேமெண்டாக வாங்குவதாக இணையதளத்தில் வெளியாகியது. ஆனால் இவை அதிகாரபூர்வமான ஒன்றாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here